தேவாலயத்தில் பிராா்த்தனை செய்த நீரை பருகிய பெண் திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு

661 0

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புத்தளம் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார்.

இவர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்துள்ள நிலையில், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதற்காக நீரைக் கொண்டு சென்றுள்ள நிலையில் அந்த நீரை தேவாலய மதகுருவிடம் கொடுத்து பிரார்த்தனை செய்துள்ளார்.

பின்னர், பிரார்த்தனை செய்த நீரை பருகிய இந்தப் பெண் திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.