நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக எம்.ஜி. வீரசேன கமகே தெரிவு

14 0

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கெக்கிராவை தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் எம்.ஜி. வீரசேன கமகே வீரசேன கமகே இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பதவிக்கு வீரசேன சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கெக்கிராவை தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் எம்.ஜி. வீரசேன கமகே(M.G. weerasena Gamage) இன்று (24) நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி, அநுராதபுரம் மாவட்டத்தில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டிருந்தது.இந்நிலையில் குறித்த தேர்தலில் 53,618 விருப்பு வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்த எச். நந்தசேன அண்மையில் திடீரென்று உயிரிழந்திருந்தார்.

கடந்த 2020 தேர்தலில் 38,242 விருப்பு வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன கட்சியின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்த வீரசேன கமகே, புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (24) நாடாளுமன்ற அமர்வின் போது அவர் நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.