எலொன் மக்ஸ்க் திமிர்பிடித்த கோடீஸ்வரர் ; அவுஸ்திரேலிய பிரதமர் சாடல்

19 0

எலொன் மக்ஸ்கினை திமிர்பிடித்த கோடீஸ்வரர் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார்.

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து வீடியோவை எக்ஸ் தளம் அகற்றுவதற்கு மறுத்துள்ள நிலையிலேயே எலொன் மஸ்க்கினை அவுஸ்திரேலிய  பிரதமர் திமிர்பிடித்த கோடீஸ்வரர் என சாடியுள்ளார்.

கடந்த வாரம் இந்த வீடியோக்களை மறைக்கவேண்டும் என சமூக ஊடகங்களிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை அடிப்படையாக வைத்து இது குறித்த முடிவை எடுப்பேன் என எக்ஸ் தளம்  தெரிவித்திருந்தது.

மஸ்க் தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று மாத்திரமில்லை பொதுவான ஒழுக்கநெறிகளிற்கு அப்பாற்பட்டவர் என கருதுகின்றார் என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

சிட்னி தேவாலய கத்திக்குத்து தொடர்பான வீடியோவை அகற்றாவிட்டால் சமூக ஊடகங்களிற்கு கடும் அபராதம் விதிக்கப்போவதாக  கடந்தவாரம் அவுஸ்திரேலியாவின் ஈபாதுகாப்பு ஆணையாளர் எச்சரித்திருந்தார்.

இந்த உத்தரவை ஏற்றுக்கொள்வதற்கு எக்ஸ் தளம் மறுப்பதும் அதற்கு எதிராக கருத்து தெரிவிப்பதும் வழமைக்கு மாறான விடயமாக  காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் சமூக ஊடகங்கள் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தவேண்டும் ஆனால் மஸ்க் அதனை வெளிப்படுத்துகின்றார் இல்லை என குறிப்பிட்டுள்ளார்