புதிய வளாகத்திற்கு மாற்றப்படும் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு

13 0

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி பத்தரமுல்ல ஸ்ரீ சுபூதிபுர வீதியில் உள்ள “சுஹுருபாய” கட்டிடத்தின் 16வது மாடியில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாவது,

இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரையிலான வழமையான  அலுவலக நேரங்களில், காலை 8.30 முதல் மாலை 4.15 வரை புதிய அலுவலக வளாகத்தில் அனைத்து தூதரக சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

சுஹுருபாயவில் உள்ள புதிய வளாகத்திற்கு சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக் கட்டமைப்பை (e-DAS) மாற்றுவதற்கு வசதியாக, கொழும்பில் உள்ள தூதரக விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் ஆவண சான்றளிப்பு சேவைகள் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பொதுமக்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

எவ்வாறாயினும், மேற்படி இடைக்காலத்தின் போது, யாழ்ப்பாணம், திருகோணமலை, குருணாகல், கண்டி மற்றும் மாத்தறையில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்கள் வழமையான அலுவலக நேரங்களில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

சான்றளிப்பிற்கான விண்ணப்பங்ககை வழமை போல் பிராந்திய அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.  எவ்வாறாயினும், சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் 02 மே 2024 வியாழன் அன்று மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

எந்தவொரு அசௌகரியத்தையும் தவிர்க்கும் நோக்கில் 26 ஆம் திகதி மாலை 4.15 மணிக்குள் கொழும்பில் உள்ள தூதரகப் பிரிவிலோ அல்லது ஏதேனும் பிராந்திய தூதரக அலுவலகங்களிலோ சான்றளிப்பிற்கான எந்தவொரு அவசர விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.