குப்பைகள் குவிந்து கிடக்கும் மில் ஓயா பகுதி!

17 0

பஸ்ஸர, மில்லபெத்த பிரதேசத்தில் உள்ள மில் ஓயா பகுதியானது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள அழகான இடமாகும்.

இதனால் இந்த பகுதிக்கு பெரும்பாலான மக்கள் வருகை தருகின்றனர். இங்கு வருகை தரும் மக்களின் செயற்பாடுகளினால் இந்த அழகான சூழல் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் , பொலித்தீன் போன்ற கழிவுப்பொருட்களினால் இந்த சுற்றுச்சூழலில் வாழும் மிருகங்களுக்கும் தீங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இங்கு வருகை தரும் மக்கள் அனைவரும் இந்த சுற்றுச்சூழலைப் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.