ரயில் சேவைகள் தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்குவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு

23 0

புகையிரத பராமரிப்பு பணிகளுக்கும் கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் புகையிரத சேவையானது  தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  பஸ்கள் இல்லாத வீதி களில் பாடசாலைக்கும் மருத்துவமனைக்கும்  செல்வதற்காக  இந்திய கடன் திட்டத்தின் கீழ் 500 பஸ்களை  கொள்வனவு  செய்துள்ளது.

அதுமட்டுமன்றி அவிசாவளையில் இருந்து கொழும்பு வரையிலான களனி ரயில் பாதையை  மின்சார ரயில்பாதையாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.