தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

17 0

தெவுந்தர கடற்கரையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 380 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருட்களை  அரசாங்க இரசாயன பகுப்பாளருக்கு  அனுப்பி வைக்குமாறு கொழும்பு  மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது .

கடந்த 12ஆம் திகதி பத்து மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 263 கிலோ கிராம் போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தெவுந்தர கடற்கரையிலிருந்து 246 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்த போதைப்பொருள் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீது போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்கு எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .