திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா..?

20 0

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப் புறத் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான திரியாய்க் கிராமத்தின் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தின் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக கிணறு ஒன்று காணப்படுகிறது.

சுமார் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் காணப்படுகின்ற இந்த பாடசாலையில் மாணவர்களுடைய தண்ணீர் தேவைக்கு பிரதானமாக காணப்படுவது இந்த கிணறு மாத்திரமே. இந்த கிணற்றில் இருந்தே மோட்டார் மூலமாக தாங்கிகளுக்கு பெறப்படுகின்ற நீர் மாணவர்களுடைய தண்ணீர் தேவைக்காக விநியோகிக்கப்படுகிறது.

இந்தக் கிணறானது மூடப்படாமல் திறந்த நிலையில் இருப்பதனால் மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுகிறது. எனினும், இந்த நீரையே மாணவர்கள் தமது நீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் உணவு சமைப்பதற்கும் இதே கிணற்று நீரே பயன்படுத்தப்படுகின்றது.

RDS நிறுவனத்தினால் அமைத்துக் கொடுத்த கொடுக்கப்பட்ட நீர் சுத்திகரிக்கின்ற இயந்திரம் கொண்ட தொகுதி பாடசாலைக்கு அருகிலே பாடசாலை வளாகத்தினுள் இருக்கின்ற போதிலும், அது தற்போது நீண்ட காலமாக பாவணைக்கு உட்படுத்தப்படாத நிலையில் பூட்டி வைக்கப்பட்டதாக காணப்படுகிறது. அந்த நீர் சுத்திகரிப்பு தொகுதி பயன்படுத்தப்படாமையினால் மாணவர்கள் இந்த அழுக்கடைந்த நீரையே பருக வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது நீர் சார்ந்த நோய்களை ஏற்படுத்தக்கூடியதாகக் காணப்படுகிறது.

எனவே, அதிகாரிகள் இந்த நீர் சுத்திகரிக்கின்ற தொகுதியை இயக்குகின்ற அளவிற்கு அதனை முன்னேற்படுத்தி மாணவர்களுடைய நீர் தேவைக்கு சிறந்த தீர்வை பெற்றுத்தர முன்னேற வேண்டும். தற்பொழுது அதிகரித்து வருகின்ற வெயில் நிலைமையில் மாணவர்கள் அதிகமாக தண்ணீர் தேவையை இந்த நீர் நீரின் மூலமாகவே பெற்று கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.