போரை நிறுத்த ஜேர்மனி மேற்கொண்ட முயற்சிக்காக நன்றி தெரிவித்துக்கொண்ட ஜெலன்ஸ்கி

43 0

ஜேர்மன் சேன்ஸலர் சீனா சென்றிருந்தபோது, ரஷ்ய உக்ரைன் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர எடுத்த முயற்சிகளுக்காக உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவி சுமார் 25 மாதங்களாகிவிட்டன. இன்னமும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் சமீபத்தில் அரசு முறைப்பயணமாக சீனா சென்றிருந்தார்.

அப்போது அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் விவகாரம் முக்கிய இடம்பிடித்தது.

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஷோல்ஸ் ஜி ஜின்பிங்கை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், ரஷ்ய உக்ரைன் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர எடுத்த முயற்சிகளுக்காக தான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.