கெஹலியவின் குடும்ப உறுப்பினர்கள் சுகாதார அமைச்சின் வாகனங்களிலேயே சிறைசாலைக்குச் செல்கின்றனராம்!

120 0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களாகும் நிலையில்,  அவர் அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்ச்சியாக அவரது குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், விஜேராம மாவத்தையில் அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் ஏன் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை எனவும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரச உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அவர் பெற்றிருந்த அனைத்துச் சலுகைகளும் உடனடியாக இரத்துச் செய்யப்படும், ஆனால், கெஹலிய ரம்புக்வெலவுக்கு ஏன் விசேட கவனம் செலுத்தப்படுகிறது என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்கள் அதே உத்தியோகபூர்வ வாகனங்களில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருவதாகவும் அந்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.