நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம் குதிரைப் பந்தயத்தில் உள்ளூர் ‘ஜொக்கி’ ரவிகுமார் சாதனை

145 0

நுவரெலியாவில் சித்திரை புத்தாண்டுடன் நடைபெற்றுவரும் வசந்தகால கொண்டாட்டத்தின் ஓர் அம்சமான குதிரைப் பந்தயத்தில் மிக முக்கியமான றோயல் டேர்வ் க்ளப் கவனர்ஸ் (ஆளுநர்) கிண்ண பந்தயப் போட்டியில் ஹியர் அண்ட் நவ் குதிரையை செலுத்திய லோகேந்திரன் ரவிகுமார் வெற்றிபெற்று வரலாறு படைத்தார்.

குதிரைப்பந்தயத் திடல் (ரேஸ் கோஸ்) கிராமத்தைச் சேர்ந்த குதிரையோட்டி (ஜொக்கி) லோகேந்திரன் ரவிகுமார் மிக முக்கிய குதிரைப் பந்தயப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கிராமத்திற்கும் நுவரெலியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும்வகையில் நுவரெலியா றோயல் டேர்வ் கிளப்பினால் 6 குதிரைப் பந்தயப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (15) நடத்தப்பட்டது.

அவற்றில் மிக முக்கியமான கவர்னர்ஸ் (ஆளுநர்) கிண்ண குதிரைப் பந்தயப் போட்டியில் ஹியர் அண்ட் நவ் குதிரை வெற்றிபெற்றதுடன் அந்தக் குதிரையை லோகேந்திரன் ரவிக்குமார் செலுத்தினார்.

அப் போட்டியில் றோயல் கிறிஸ்டல் குதிரையை செலுத்திய பி. எஸ். கவிராஜ் 2ஆம் இடத்தையும் வெஸ்டன் விண்ட் குதிரையை செலுத்திய பி. விக்ரம் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

குதிரைப் பந்தயப் பொட்டி முடிவுகள்

சுப்பர் செலஞ்ச் கிண்ணம்

1ம் இடம்: ஸூலு ஃபென்டசி – ஜொக்கி ஆகாஷ் அகர்வால்

2ம் இடம்: ஸ்ட்ரீட் கெட் – ஜொக்கி பி. சாய் குமார்

3ம் இடம்: ஸ்டொமொன்ட் – ஜொக்கி எல். ரவிகுமார்

விளையாட்டுத்துறை அமைச்சு

மற்றும் சுற்றுலாத்துறை கிண்ணம்

1ம் இடம்: குவீன்ஸ் ஹோல் – ஜொக்கி பி. சாய் குமார்

2ம் இடம்: கோர்ட்ஸ்வேர்ட் – ஜொக்கி பி.எஸ். கவிராஜ்

3ம் இடம்: மிஸ்டிக் ஃப்ளேம் – ஜொக்கி ஆகாஷ் அகர்வால்

ஜப்பான் தூதுவர் கிண்ணம்

1ம் இடம்: ஃபெப்யூலஸ் ஷோ – ஜொக்கி பி. சாய்குமார்

2ம் இடம்: க்ரெக் ஒவ் டோன் – ஜொக்கி பி.எஸ். கவிராஜ்

3ம் இடம்: சன்டோஸ் – ஜொக்கி ஆகாஷ் அகர்வால்

ஆர்.ரி.சி. குவீன்ஸ் கிண்ணம்

1ம் இடம்: கொஸ்மிக் பீலிங் – ஜொக்கி பி. எஸ். கவிராஜ்

2ம் இடம்: பிக் ட்ரெஷர் – ஜொக்கி பி. விக்ரம்

3ம் இடம்: மெஹரான் – ஜொக்கி பி. சாய் குமார்

ஆர்.ரி.சி. கவர்னர்ஸ் கிண்ணம்

1ம் இடம்: ஹியர் அண்ட் நவ் – ஜொக்கி எல். ரவிகுமார்

2ம் இடம்: றோயல் கிறிஸ்டல் – ஜொக்கி பி. எஸ் கவிராஜ்

3ம் இடம்: வெஸ்டன் விண்ட் – ஜொக்கி பி. விக்ரம்