380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்தல்: சந்தேக நபர்களை தடுப்பில் வைத்து விசாரிக்க உத்தரவு!

157 0

சுமார் 380 கோடி ரூபா  பெறுமதியான 263 கிலோ கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட  மீனவர்கள் 10 பேரையும் எதிர்வரும் 22ஆம்  திகதி வரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு  கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை வெளிக்கொணரும் வகையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.