இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனத்தில் தீ விபத்து!

21 0

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவமனது பண்டாரவளை ஹல்பே பகுதியில் ராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்தில்  இன்று (16) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினால் அமைச்சருக்கோ அல்லது சாரதிக்கோ காயங்கள் ஏற்படவில்லை எனவும், பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.