வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் காலமானார்

28 0

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் ஞாயிற்றுக்கிழமை (14) காலமானார்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த இரண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு, வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இரண்டு தடவை தவிசாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.