மனிதாபிமான பணியாளர்களிற்கு தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படும் காசா – மயிரிழையில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய மனிதாபிமான பணியாளர்

22 0

காசாவில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்தவேளை தன்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மனிதாபிமான பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் உட்பட ஏழுமனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்ட சில வாரங்களிற்குள் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுனிசெவ் பணியாளரும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளருமான டெஸ் இன்கிராம் காசாவில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில் தனது வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார்.

நான் உண்மையில் அதிஸ்டசாலி உயிர் தப்பினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் குடிநீர் விநியோகத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைக்காக வாகனத்தொடரணியில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

காசாவின்வடி சோதனை சாவடியில் வாகனத்தொடரணி நிறுத்தப்பட்டவேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

நாங்கள் அந்த பகுதியில் காத்திருந்தவேளை துப்பாக்கி பிரயோகம் ஆரம்பமானது பொதுமக்கள் காணப்பட்ட சோதனைசாவடியிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது அவர்கள் சிதறியோடினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சன்னங்கள் எனது காரை தாக்கின நான் அமர்ந்திருந்த பகுதிகளின் கண்ணாடிகளை தாக்கின என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பயணித்தது கவசவாகனம் என்பதால் உயிர்பிழைத்தோம் இல்லாவிட்டால் துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கும் மோசமான விடயங்கள் இடம்பெற்றிருக்கலாம் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் எங்களது பணி நாங்கள் பயணிப்பது குறித்து நன்கு தெரியும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமான பணியாளர்களாக பணியாற்றுவது எவ்வளவு கடினமானது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.