பெரமுனவின் ஆதரவு வேட்பாளருக்கும் சஜித்துக்கும் இடையிலேயே போட்டி

17 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் ஆதரவுடன் களமிறங்கும் வேட்பாளருக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் தான் பிரான போட்டி காணப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பலரும் வரிசையில் நிற்கின்றார்கள். வெவ்வேறு கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவையெல்லாம் தேர்தலில் மக்களை திசைதிருப்பி வெற்றிகளை தம்வசப்படுத்துவதற்கே ஆகும். ஆனால் கள யதார்த்த நிலைமையானது முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது.

பொதுஜனபெரமுனவின் ஆதரவுடன் வேட்பாளர் ஒரு நிறுத்தப்படுவார் அல்லது பொதுஜனபெரமுனவில் இருந்து வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவர்.

அவ்வாறு நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் மட்டுமே வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அந்த வகையில் குறித்த வேட்பாளருக்கும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் தான் பிரதான போட்டி நடைபெறவுள்ளது என்பதே எனது கணிப்பாகும்.

எனவே, ஏனையவர்கள் தேர்தலின் பின்னர் அடையாளமில்லது போய்விடுவர்கள். அவர்களால் அதற்குப் பின்னர் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தினைக் கூட அவர்களால் பெறமுடியாத நிலைமையே உருவாகும் என்றார்.