அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்.

176 0

தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த
‘மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்’

நெதர்லாந்தில் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த ‘மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்’ உள்ளரங்க விளையாட்டு நிகழ்வு 06-04-2024 சனி அன்று அல்மேரா பிரதேசத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்து தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 2ஆவது தடவையாக நடத்தப்பட்ட இந்நிகழ்வு சுமார் 10.00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு பின் தமிழீழத் தேசியக் கொடியேற்றல், ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து பெண்களிற்கான பூப்பந்தும் சிறுவர்களிற்கான விளையாட்டுக்களும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பெண்களிற்கான விளையாட்டுக்கள் தாச்சிப்போட்டி என்பனவும் மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. மக்களின் ஆரவாரத்துடனும் கரவொலிகளுடனும் சிறப்புற நடைபெற்ற இந் நிகழ்வு வெற்றிபெற்ற சிறார்களிற்கும் வீராங்கனைகளிற்கும் வெற்றிப் பதக்கங்களும் வெற்றிக் கெடயங்களும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 20.00 மணியளவில் தேசியக்கொடி கையேற்கப்பட்டு இறுதியில் எமது தாரகமந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.