கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் ; ஹோமாகமவில் சம்பவம்

131 0

ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத ஐந்து சந்தேக நபர்கள் அங்கிருந்த ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (11) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.