மைத்திரியின் தாய்லாந்து விஜயம் குறித்து காவிந்தவுக்கு எழுந்த சந்தேகம்

125 0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தாய்லாந்துக்கான விஜயம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த  ஜயவர்தன சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழுவினர் தாய்லாந்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையிலேயே இந்த விஜயம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்த போதே காவிந்த ஜயவர்தன  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து நோக்கி விஜயம் மேற்கொண்டுள்ளமை சந்தேகத்தை எழுப்புவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.