தேர்தல்களை பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் தனது வீட்டின் முன்னால் பதாதையொன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.
உள்ளூராட்சிதேர்தல்களை பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாக வேட்புமனுக்களை கோரிய பின்னர் தேர்தல்களை பிற்போடுவதற்கு ஏதேச்சதிகாரத்திற்கு சமமானது என குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளிற்கு பதில் அதிகாரிகள் நிர்வாகம் செய்வது பிரஜைகளின் உரிமையை மீறும் செயல் என தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதையில் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

