கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது

