ஹிக்கடுவை நகரத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (5) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 57 வயதுடைய லிதுவேனிய பிரஜையாவார்.
இவர் நேற்று (5) மாலை ஹிக்கடுவை நகரத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் இவரை மீட்ட்டு பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

