கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-கும்பகோணத்தை மாவட்டமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும். கேஸ் விலையை 10 ஆண்டுகளில் 800 ரூபாய் உயர்த்திவிட்டு, 100 ரூபாய் குறைத்துள்ளனர்.இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்.இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். முரசொலியையும், உதயசூரியனையும் பிரிக்க முடியாது. மோடி நமக்கு பல முறை வேட்டு வைத்துள்ளார்.
தற்போது நாம் அவருக்கு வேட்டு வைக்க வேண்டும்.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வையுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

