நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி சுசில் ஜயதுங்கவை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சட்டத்தரணியை 5 லட்சம் ரூபாய் தனிநபர் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர் ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை உயர் நீதிமன்றப் பதிவாளர் முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காம் திங்கட்கிழமைகளில் பொலன்னறுவை மேல் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் ஆஜராக வேண்டம் எனவும், இந்த பிணை நிபந்தனைகளை மீறினால் பிணை ரத்து செய்யப்பட்டு குறித்த சட்டத்தரணி சிறையில் அடைக்கப்படுவார் எனவும் உத்தரவிட்டுள்ளது.

