ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 20 கோடி ரூபா பண மோசடி!

14 0

ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 20 கோடி ரூபா பண மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  மத்திய மாகாண உயர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் தம்புள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் மொழிப் பாட ஆசிரியராகத் தன்னை இனங்காட்டிய இவர், ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி  பலரிடம் 5 முதல் 20 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.