வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்

20 0

இலங்கையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் டுபாயில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த இருவர் டுபாயில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன் மதுசங்க மற்றும் அண்டன்வில்வத்தையைச் சேர்ந்த ரமேஷ் உதார திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.

உடல்நிலை மோசமடைந்ததையடுத்து உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்ததாக பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.