202 கிலோமீற்றர் நீளமுடைய யானை வேலி அமைப்பு !

16 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக தொடர்கின்ற யானை – மனிதன் மோதலினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக பல்வேறு நலனுதவித் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் கே. சுரேஷ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 202  கிலோ மீற்றர் நீளமான 9 யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வவுணதீவு, வாகரை, கிரான், செங்கலடி, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலக பிரிவுகளிலேயே இவ்வாறு யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாண்டும் யானைகளின் ஊடுருவல் உள்ள பல கிராமங்களுக்கு மின்சார வேலிகள் அமைக்கப்படவுள்ளதாகவும்  பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.