மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு ; மஹியங்கனையில் சம்பவம்!

16 0

காட்டு யானைகள் உட்பிரவேசிக்காதவாறு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (3)  காலை மஹியங்கனை, மாபாகட , ரோஹன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த முதியன்சேலாகே மெதகெதர வீரசேன என்பவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.