தர்கா நகரில் கஜமுத்துக்களுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

11 0

கஜமுத்துக்களை சுமார் 2 கோடி ரூபாய்க்கு  விற்பனை செய்ய தயாராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரி நேற்று திங்கட்கிழமை (01) பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி தர்கா நகரின் தல்கஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவராவார்.

மேலும், விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது உப பொலிஸ் பரிசோதகர் கசுன் பத்திரன மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் குழுவினால்  முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.