கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் பொலிஸார்

52 0

கனடாவில் வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த பெண் எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற 26 வயதான பெண்ணே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவதாக இந்தப் பெண் இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

இந்நிலையில் அதிகமானோர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும், மோசடியில் சிக்கியோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.