கொள்ளுப்பிட்டியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரு பொலிஸார் கைது!

113 0

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல விடுதி ஒன்றுக்கு அருகில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரு  பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பத்தரமுல்லை அலுவலகத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளான பொலிஸார் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிடி பொலிஸ் நிலையத்தின்  சமூக பிரிவின் பொறுப்பதிகாரியும்  மற்றுமொரு பொலிஸ் அதிகாரி ஒருவருமே இவ்வாறு சோதனை மேற்கொண்ட போது சந்தேக நபர்களால் இடையூறுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்போது இவர்களுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதையடுத்து கான்ஸ்டபில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.