யாழ் மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி முன்னெடுப்பு

41 0

யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுக்கும் வகையில், ஆரோக்கியமான யாழ் பவனி துவிச்சக்கரவண்டி பயணம் இன்று சனிக்கிழமை (30)  யாழ்ப்பாணம் ஆரியகுளத்திற்கு  அருகாமையில், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் சந்திரன் கிருஷ்னேந்திரன் தலைமையில்  நடைபெற்றது.

சர்வதேச சுழியக் கழிவுதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம், யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாண பொஸில் நிலையம், வடமாகாண சுற்றுலா சேவை அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி ஆரம்பமானது .

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டு தூய்மையாக்கும் திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.

குறித்த ஆரோக்கியமான யாழ் பவனியின் துவிச்சக்கர வண்டி பயணம் யாழ் ஆரியகுளத்தில் இருந்து ஆரம்பமாகி வேம்படிச்சந்தி, வைத்தியசாலை வீதி மகாத்மா காந்தி சுற்றுவட்ட வீதி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு வீதி, பண்ணை வீதி, ஊடாக பண்ணை சுற்று வட்ட வீதியுடாக வந்து யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வந்து நிறைவடைந்தது.