சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணி மீட்பு

16 0

இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலை பகுதிக்கு சென்றவேளை  எஹெல கனுவவில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) காலை 100 மீற்றருக்கும் அதிகமான பள்ளத்தில் வீழ்ந்த  இந்திய சுற்றுலாப் பயணி  ஒருவர்  மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மீட்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மகராஷ்ரா மாநிலம் மும்பையிலிருந்து வருகை தந்த 25 வயதுடைய சுற்றுலா பயணி ஒரு குழுவினருடன் இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளி பாதை மலைக்கு ஏறிக்கொண்டிருந்த வேளை இன்றையதினம் அதிகாலை 5.00 மணியளவில்  மலை விளிம்பிலுள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில், உடமலுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசேட அதிரடிப்படையினர் சுற்றுலா பயணியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

அங்கிருந்து நல்லதண்ணிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகத்தர் 76216  பத்மசிறி,  பொலிஸ் உத்தியோகத்தர் 99695 பிரதீஷ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் 102687 அஜித் ஆகியோர் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.