குறைவடைந்த பணவீக்கம்

13 0

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.

இருப்பினும், உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 3.5 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, பெப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவுப் பொருள் அல்லாத பணவீக்கம் மார்ச் மாதத்தில் -0.5 சதவீதமாகக் குறைவடைந்தமையே மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.