கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கைன் கைப்பற்றல்

18 0

கொலம்பியாவில் நடுக்கடலில்  அதிவேக படகை துரத்திச் சென்று 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு இராணுவம்  கைப்பற்றியுள்ளது.

இதுவே  இவ் ஆண்டு  கரீபியன் கடலில் கைப்பற்றிய மிகப் பெரிய தொகை கொண்ட கொக்கைன் போதைப் பொருளாகும். அதன் பெறுமதி 11 கோடியே 30 இலட்சம் அமெரிக்க டொலர்களாகும்.

கொலம்பிய கடற்படை, கொலம்பிய விமானப்படை மற்றும் அமெரிக்காவின் தெற்கு கட்டளையின் கூட்டு இடைநிலை பணிக்குழு  ஆகியன இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சான் ஆண்ட்ரேஸ் இஸ்லாவுக்கு அருகில் படகில் கடத்திச் செல்லப்பட்ட கொக்கையின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக கொலம்பிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கொலம்பிய இராணுவத்தினர் மற்றொரு படகில் மின்னல் வேகத்தில் துரத்திச் சென்று அந்த படகை பிடித்து போதைப் பொருளை கைப்பற்றிய காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கொலம்பிய பிரஜைகள் மூவரும், ஹோண்டுராஸ் பிரஜை ஒருவரும் மற்றும் வெனிசுலா  பிரஜை ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகில் காணப்படும் கொக்கைன் போதைப்பொருள் 60 சதவீதம் கொலம்பியாவில் உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.