பணம் கொள்ளையடித்த கொள்ளையர் கும்பலை கைது செய்ய சென்றபோது பொலிஸாருடன் நடந்த சண்டையில் கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வேரகல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய தினேஷ் துலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 2 சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிக பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை குறைந்த விலைக்கு தருவதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வருபவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸாருக்கு நேற்று (26) முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதன்படி, கொள்ளைகாரர்களை கைது செய்வதற்காக சம்பந்தப்பட்ட முறைப்பாட்டாளருடன் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு காரில் மறைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

