ரஷ்யாவில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரான்ஸை தாக்க முயன்றவர்கள் – இமானுவல் மேக்ரான்

17 0

ரஷ்யாவில் கச்சேரி அரங்கில் 137 பேரை கொன்ற தாக்குதல்தாரிகள், ஏற்கனவே பிரான்சை தாக்க முயன்றவர்கள் என பிரதமர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 137 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு IS அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், பிரான்ஸ் முன்னர் இதேபோன்று தாக்குதல் நடந்த இருந்ததும், அதனை தங்கள் அரசு முறியடித்ததாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ”எங்கள் உளவுத்துறை சேவைகள் மற்றும் எங்கள் முக்கிய பார்ட்னர்களுக்கு கிடைத்த தகவல்கள், இது IS அமைப்பு தூண்டிவிட்டு சென்றது என்பதைக் குறிக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட குழு…கடந்த சில மாதங்களாக எங்கள் மண்ணில் பல தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது.

கச்சேரி அரங்கு தாக்குதல் தொடர்பாக ரஷ்ய உளவுத்துறை சேவைகளுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. பல நாடுகளை குறிவைத்து வரும் இந்த குழுக்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரதமர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) கூறும்போது, ‘கிழக்கு பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க் நகரத்தின் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரான்ஸ் 2 தாக்குதல்களை முறியடித்துள்ளது. எங்கள் பிரதேசத்தின் எல்லா இடங்களிலும் விதிவிலக்கான வழிமுறைகளை வரிசைப்படுத்துவோம்’ என்றார்.