களனி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (25) காலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சக மாணவர் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்தமையையடுத்து எதிர்ப்புத் தெரிவித்து குறித்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

