பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு

24 0

பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியா தீவு நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகர் வெவாக்கிலிருந்து 88 கிமீ தென்மேற்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேதம் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.