அதுருகிரிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதுருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரில் ஒருவரிடமிருந்து 7 கிராம் 100 மில்லி கிராம் ஹெரொயின் போதைப்பொருளும் மற்றவரிடமிருந்து 7 கிராம் 560 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கடுவலை மற்றும் ஹோமாகம பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும் 41 வயதுடையவர்களாவர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

