யுத்தத்தின் இறுதிகாலங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்”

138 0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த புகைப்படங்களையும உள்ளடக்கிய போரின் சாட்சியங்கள் நூலை வெளியிடவுள்ளார்.

போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்;து கொண்டிருக்கின்ற நிலையி;ல் புலம்பெயர் தேசங்களில் இந்த அவர் நூலை வெளியிடவுள்ளார்.

இந்த நூல் ஏப்பிரல் 27 த் திகதி கனடா வன்கூவரிலும் மே 12 ம் திகதி சுவிட்சர்லாந்திலும் வெளியாகவுள்ளது.

எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல  வேறு போர்க்காலத்தில் ஊடகவியலாளராக பணியாற்றியவர்களுக்கு கிடைத்திருக்காது. இறுதிப்போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையை தவிர வேறு எந்த அச்சு ஊடகங்களும் வெளிவரவில்லை. பத்திரிகைப்பயணமும் அத்தோடு நான் எடுத்த ஒளிப்படங்களையும் உள்ளடக்கி “ போரின் சாட்சியம் ” என்ற நூலை உருவாக்கியுள்ளேன். இதில் சில இறுதிப்போர்க்காலத்தில் பணியாற்றிய  சில ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2009 போர்நடைபெற்ற காலத்தில் நீங்கள் பார்த்திருந்த ஒளிப்படங்களுக்கான கதைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.   போரின் மூலம் இனஅழிப்புச் செய்யப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்களைக்கொண்ட இந்நூல் எதிர்வரும் 2024- ஏப்பிரல் 27 சனிக்கிழமை, அன்று மாலை 4 மணிக்கும் வன்கூவரிலும் வெளியிடப்படுகிறது என்பதை அறியத்தருகின்றேன்.

என ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு தெரிவித்துள்ளார்.