ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம் எப்போது அமுலுக்கு வருகிறது?

43 0

ஜேர்மனியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, இரட்டைக் குடியுரிமை போன்ற விடயங்களை சாத்தியமாக்குவது தொடர்பிலான சட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பில் பல அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன.

ஆனாலும், அந்த சட்டம் எப்போது முழுமையாக நிறைவேறும் என ஆவலுடன் காத்திருக்கும் வெளிநாட்டவர்களின் ஆவல் இதுவரை நிறைவேறவில்லை என்றே கூறலாம்.

இரட்டைக் குடியுரிமை தொடர்பான சட்ட வரைவு ஒன்று, ஒரு மாதத்திற்கு முன்பே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

ஆனாலும், சட்டம் அமுலுக்கு வந்தாற்போல் தெரியவில்லை. இதனால், அந்த சட்டம் நிறைவேற பல ஆண்டுகளாக காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த சட்டம் பெடரல் ஜனாதிபதியின் கையெழுத்துக்காக காத்திருக்கிறதாம். விரைவில் அது கையெழுத்தாகும் என்கிறார், Social Democrat (SPD) கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Hakan Demir.

ஆனால், உண்மையில் அந்த சட்டம் ஜனாதிபதியின் அலுவலகத்தை அடைந்ததும், அந்த சட்டம் ஜேர்மனியின் அடிப்படை சட்டத்துக்கு உட்பட்டு அமைந்துள்ளதா என்பதை ஜனாதிபதி அலுவலக அலுவலர்கள் மீளாய்வு செய்வார்கள். அது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், அதற்கு நிச்சயம் சிறிது நேரம் பிடிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. குறைந்தபட்சம் இரண்டு வாரங்களோ அல்லது அதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கூட ஆகலாம், உறுதியாகச் சொல்லமுடியாது என்கிறார்கள் ஜனாதிபதி அலுவலக அலுவலர்கள்.

ஜனாதிபதி சட்டத்தில் கையெழுத்திட்டபின், அது, அரசு ஊழியர்களால், சட்டத்தை அமுல்படுத்தும் நடைமுறைக்கு உட்படுத்தப்படும். அதற்கு சரியாக மூன்று மாதங்கள் பிடிக்கும்.

ஆக, ஜனாதிபதி இரட்டைக் குடியுரிமைச் சட்டத்துக்கு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் அந்த சட்டம் அமுலுக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.