கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்!

95 0

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி நேற்று (19) மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு இணங்க நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம் இணைந்து மட்டக்களப்பில் வெளிவாரி கற்கைகள் நிலையத்திற்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று காலை ஒன்றினைந்தனர்.

இதேவேளை ஒவ்வொரு வாரமும் தீர்வு கிடைக்கும் வரை இப் போராட்டம் இடம்பெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.