சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம்!

114 0

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை  ஐக்கிய மக்கள் சக்தியில் வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை தளர்த்துமாறு  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (19) நிராகரித்துள்ளது.

இதன்படி, குறித்த தடை உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரத் பொன்சேகா தாக்கல் செய்த முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடை உத்தரவை  முன்னர் பிறப்பித்திருந்தது.