பணவீக்கம் அதிகரிப்பதால் 22% வட்டி விகிதம் தொடரும்: பாகிஸ்தான் மத்திய வங்கி அறிவிப்பு

19 0

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 22 சதவீதமாகவே தொடரும் என அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பணவீக்க விகிதம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 32.89% என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனை கருத்தில்கொண்டு, பாகிஸ்தான் மத்தியவங்கி ஆறாவது முறையாக வட்டிவிகிதத்தை 22% என்ற அளவிலேயே நிலைநிறுத்தியுள்ளது.

இதன் மூலம் 2025-ம் ஆண்டு செப்டம்பருக்குள் பணவீக்க விகிதம் 5-7%-ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்களே ஆகியுள்ள நிலையில் பணவீக்கம் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், 14 பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், 23 பொருட்களின் விலை மாற்றமின்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், 1.1 பில்லியன் டாலர் இறுதித் தவ ணையை பெறுவது தொடர்பாக சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களுடன் பாகிஸ்தான் விவாதத்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், சர்வதேச நிதியத்திடம் இருந்து 6-8 பில்லியன் டாலர் புதிய கடன்களை பாகிஸ்தான் கோரலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.