இளம் பிக்கு நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு!

94 0

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஒய சங்கானந்த என்ற இளம் பிக்கு தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வனாத்தவில்லுவ ஸ்ரீ தர்மராஜா விகாரைக்கு விஜயம் செய்திருந்த போது, விகாரையில் இருந்த பிக்குகள் குழுவுடன் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிக்குவின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நாளை நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.