ஹங்வெல்லயில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

102 0

ஹங்வெல்ல, பாலகேவத்தை பகுதியில் 01 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் வலான ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரந்திகம்பொல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான சந்தேக நபர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை வலான ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 01 கிலோ 03 மில்லிகிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 03 கையடக்க தொலைபேசிகள்,  05 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் 04 வங்கி அட்டை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரருடன் நெருங்கிய தொடர்புடையவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.