புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

22 0

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது.

விபத்து தொடர்பாக தெரியவருகையில்….

யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற புகையிரதம்  தேக்கவத்தை பகுதியில் சென்றுகொண்டிருந்த போது முதியவர் ஒருவர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியைசேர்ந்த 67 வயதான முதியவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.