நாடு முழுவதும் சீரான வானிலை

96 0

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் தி​ணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (18) அவதானம் செலுத்த வேண்டிய அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, வடமேல், வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அவதானம் செலுத்த வேண்டிய அளவிற்கு வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, போதியளவு நீரை அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் தி​ணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.