யாழ்ப்பாணத்தில் பேரனுக்கு தாத்தா வழங்கிய பரிசு!

21 0

யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி அதனை தனது  அன்புப் பரிசாக வழங்கியுள்ளார்.

பேரனுக்கு ஒரு வயதே ஆகியுள்ளதால் , சிறிய முச்சக்கர வண்டிக்கு  மோட்டார் ஒன்றைப் பொருத்தி ஓட வைக்க முயற்சிக்க வில்லை எனவும் இரண்டு வயதுக்கு பிறகு சிறிய ரக மோட்டார. ஒன்றினை பொருத்தி , அதனை ரிமோல்ட் மூலம் இயங்க கூடியவாறு செய்வதற்கு முயற்சிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பஜாஜ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முச்சக்கர வண்டி போன்றே இந்த சிறிய ரக முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளமையால் பலரும் அதனை உருவாக்கிய ஐயாவை பாராட்டி வருகின்றனர்.